Sunday, December 12, 2010

அதிமுகவில் நடிகர் விஜய்

அதிமுகவில் நடிகர் விஜய்

தமிழக் திரைப்பட உலகில் முன்னணி நடிகரான விஜய் விரைவில் அதிமுகவில் இணையக்கூடும் என்ற செய்திகள் அதிமுக வட்டாரத்தில் இருந்தும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தும் வெளி வரத்தொடங்கியுளது.
சமீபகாலமாக நடிகர் விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின . சொல்லிவைத்தாற்போல் பெரிய இடத்து தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை தழுவின. இது குறித்து மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தின் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அவர் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்றேன் என்று மட்டும்தான் சொன்னார். அதற்கே அந்த நடிகரின் 4, 5 படங்களை தோல்வி படங்களாக ஆக்கி விட்டனர். இதைப் பற்றி அந்த நடிகர் என்னிடம் முறையிட்டார் என்றார்.

அந்த நடிகர் என்பது விஜய்தான் என்று ஊடகங்கள் வெளிப்படுத்தின. இதுகுறித்து விஜய் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசியது இதுதான் முதல்முறை. அந்த நேரத்தில் சில விஷயங்களை பரிமாறிக்கொண்டோம் என்றார். இதையடுத்து விஜய் அதிமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.

தற்போது விஜய்யின் காவலன் படம் வரும் 17ஆம் தேதி வெளியாக தயாராக இருக்கிறது. இந்நிலையில் விஜய் நடித்த குருவி, அழகிய தமிழ்மகன், வேட்டைக்காரன், வில்லு உள்ளிட்ட படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டன. எனவே நஷ்டத்திலும் விஜய் பங்கெடுத்துக்கொள்வதாக உறுதியளித்தால்தான் காவலன் படத்தை வெளியிட சம்மதிப்போம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் காவலன் படத்தின் விளம்பரங்களில் சென்னையில் புக்கிங் செய்யப்பட்ட தியேட்டர்களின் பட்டியலை மட்டுமே வெளியிட்டிருகிறார்கள். வெளியூர் தியேட்டர்களின் பெயர்கள் எதுவுமே இல்லை.

தன் காவலன் படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக விஜய் நினைக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ஜெமினி பிக்சர்ஸின் த்ரீ இடியட்ஸ் படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டிய விஜய், இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.

சன்பிக்ஸர்ஸுக்கு நெருக்கமான ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க, சன் பிக்ஸர்தான் காரணம் என்று நினைக்கிறார் விஜய். முடி ஒட்ட வெட்டப்பட்டுவிட்டதால் தற்போது எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதால், விஜய் பாரினுக்கு கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில் கடந்த 9ஆம் தேதி எஸ்.ஏ. சந்திரசேகர் போயஸ்கார்டனுக்கு சென்று, ஜெயலலிதாவை சந்தித்து விஜய்க்கு தொழில் ரீதியாக கொடுக்கும் தொல்லை குறித்து முறையிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் மீடியாக்கள் போயஸ் கார்டனை முற்றுகையிட்டதால் ஜெயலலிதாவுடனான சந்திப்பை எஸ்.ஏ.சந்திரசேகர் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை ஜெயலலிதா வீட்டுக்கு, எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்றார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

விஜய்க்கு தொழில் ரீதியாக வரும் பிரச்சனை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விவரமாக எடுத்துரைத்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்த ஜெயலலிதா அனைத்து வகையிலும் உதவியாக இருப்பதாக உறுதி அளித்தாராம்.

நடிகர் விஜய்யை அதிமுகவில் கொண்டு வந்துசேர்க்கும் வேலையை நடிகர் ராதாரவி தொடர்ந்து செய்து வரு வதாக செய்திகள் வெளிவந்த நிலையில் போயஸ் கார்டனில் விஜய் தந்தை ஜெயலலிதாவை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது

விஜய் அதிமுகவில் சேர்வார் என்றும் அதிமுகவில் சேராவிட்டால் கூட வரப்போகும் சட்ட சபை தேர்தலில் முழு மூச்சாக அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரக்களத்தில்
இறங்குவார் என அடித்துக்கூறுகிறது அதிமுக வட்டாரம் a

1 comment:

  1. நீங்கள் கூறுவது சரியே.................

    ReplyDelete