udhaiam உதயம் செய்திகள்
Saturday, December 18, 2010
வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
காங்கிரஸ் அதிமுக கூட்டணி உருவாகுமா?
அல்லது தற்போதைய கூட்டணிகளே தொடருமா ?
விஜயகாந்த்யாருடன் கூட்டணி வைப்பார் ?
இந்தக் கேள்விகளுக்கு சுவையான பதில்களை
வாசகர்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்
சிறந்த பதில்கள் நம் தளத்தில் வெளியிடப்படும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி udaiam.news7@gmail.com
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83வது சிறப்பு மாநாடு காங்கிரசின் சிக்கல்களை எதிர்கொள்ள வியூகம் அமைக்கப்படும்
காங்கிரசின் சிக்கல்களை எதிர்கொள்ள வியூகம் அமைக்கப்படும்
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பொதுச்செயலாளர் ராகுல்காந்தி உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
வடமேற்கு டெல்லியில் உள்ள சண்டிகார் சாலையில் புராரி என்ற இடத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. சுமார் 20 கோடி ரூபாய் செலவில் இந்த மாநாடுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உணவு கூடம், மருத்துவமனை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் 400க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாநாடு நடைபெறுகிறது. இது, 83 வது மாநாடு ஆகும். கடந்த 1978 ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் டெல்லியில் மாநாடு நடக்கிறது. ..
Friday, December 17, 2010
தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை -ஜெயலலிதா
தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என அதிமுக பொது செயலாளர் -ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
’’2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2001-ஆம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் வரவேற்கிறேன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினை கடைப்பிடித்ததன் காரணமாகத் தான் இது போன்றதொரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.
இந்த ஊழலின் நாயகரான முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை ஏன் விசாரிக்கவில்லை? என்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டபிறகு தான் தன்னுடைய நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத் துறை அண்மைக் காலமாக தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்தக் கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி மூன்று வாரங்கள் ஆன நிலையிலும், இது நாள் வரை ராசாவிடம் விசாரணை நடத்தாதது, மத்திய புலனாய்வு அமைப்பு தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக்குகிறது. மத்திய புலனாய்வுத் துறையின் இந்தச் செயல்பாடு தான், இந்த ஊழல் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தீர்ப்பளிக்க தூண்டுகோலாக இருந்து இருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்ததோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிந்துவிடவில்லை என்று தொடர்ந்து நான் கூறி வந்துள்ளேன். இது ஓர் ஆரம்பம் தான் என்றும் கூறியிருந்தேன். இதற்குப் பிறகு தான் இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தன.
ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ராசா மத்திய அமைச்சராக இருந்த போது உச்சத்திற்கு சென்றாலும், முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழலை 2001-ஆம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
இருப்பினும், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்பதை காரணம் காட்டி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தவிர்க்கக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வரம்பு என்பது நிச்சயமாக சில வரையறைகளுக்கு உட்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பாலானோர் இந்த ஊழலின் பின்னணியிலும், இந்த ஊழலுக்குத் துணையாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்க முடியாது.
இந்த ஊழலில் உள்ள முழு உண்மையும் வெளிவர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பது தான். எனவே, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கூர்ந்து கண்காணிக்கும் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே சமயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்
ஓட்டுக்கு தரும் காசை கோவில் உண்டியலில் போடுங்க பொன்ராதா கிருஷ்ணன்
கோவில் உண்டியலில் போடுங்க பொன்ராதா கிருஷ்ணன்
தேர்தலின் போது தி.மு.க.,வினர் ஓட்டிற்கு தரும் பணத்தை வாங்கி, அதை கோயில் உண்டியலில் போடுங்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையைப்போல, தமிழக அரசு இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று, பா.ஜ.,சார்பில் "தாமரை ரதயாத்திரை' நிகழ்ச்சி நடந்தது. இதை துவக்கி வைத்து, அக்கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளாக லட்சக்கணக்கான இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தராமல் இருக்கும் மத்திய, தமிழக அரசுகளை கண்டிக்கிறோம். அதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகை தரக்கூடாது என நாங்கள் கூறவில்லை. அவர்களைப்போல, இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். அது கிடைக்கும்வரை நாங்கள் ஓயப்போவது கிடையாது.
ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தகவல்தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்களது வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.இது நாடகம்தான். அமைச்சர் பதவியில் இருந்தபோதே, ராஜாவை டிஸ்மிஸ் செய்து தி.மு.க., முக்கிய தலைவர்களின் வீட்டில் சி.பி.ஐ., சோதனை செய்திருந்தால் மத்திய மற்றும் தமிழக அரசுகள் பதவியில் இருந்திருக்காது. ஒரே ஆண்டில் எட்டு முறை பெட்ரோல் விலையை உயர்த்தியது ஒன்றே மத்திய காங்., கூட்டணி அரசின் சாதனை.
தமிழகம் உருப்பட வேண்டுமெனில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவுகட்டப்படவேண்டும். தேர்தலில் ஓட்டுக்காக தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில், அது கொள்ளையடிக்கப்பட்ட பொதுமக்களின் பணம். ஆனால், அப்பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிடுங்கள். 60 தலித் சமுதாய குடும்ப நிலங்களை அபகரித்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது புகார் எழுந்துள்ளது, என்றார். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் முரளிதரராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரதயாத்திரை புதியம்புத்தூர், புதுக்கோட்டை, திருச்செந்தூர் வழியாக உடன்குடியை அடைந்தது. இரவு, அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு- வழக்குமூன்று சாட்சியங்கள் -முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம்
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணையில், மூன்று சாட்சியங்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக, முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும், விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்து. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி, தினகரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 41 சாட்சியங்கள், குறுக்கு விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக தகவல் கொடுத்ததால், அவர்களிடம் மறு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் 41 சாட்சியங்களிடம் மறு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முதல், சாட்சிகளின் மறுவிசாரணை துவங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரு சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும், ஜெயலலிதா தரப்புக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் வாக்குமூலம் கொடுத்தனர்.
நேற்று மூன்று சாட்சியங்கள் மட்டுமே ஆஜராகிருந்தனர். அவர்களிடம் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா விசாரணை செய்தார். சாட்சி ஜோசப் (தனியார் கம்பெனி உரிமையாளர்): என்னுடைய கம்பெனியை விலைக்கு விற்பதற்காக, சுதாகரனிடமிருந்து 20, 20, 10 லட்ச ரூபாய் என மூன்று "செக்'காக 50 லட்சம் ரூபாய் வாங்கினேன். இவர் முதல் விசாரணையில், தற்போது கூறியதை கூறியிருந்தார். ஆனால், இரண்டாம் கட்ட விசாரணையில் சுதாகரனிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கியதாக பல்டியடித்தார். தற்போது முதலில் கூறியதுதான் உண்மை என்றார்.
சாட்சி வின்சன்ட் (டிராவல்ஸ் கம்பெனி உரிமையாளர்): சுதாகரன் திருமணத்திற்கு எனது டிராவல்சில் இருந்து 10 கார்கள் வாடகைக்கு அனுப்பியது உண்மை தான். இவர் முதல் விசாரணையில் இவ்வாறே கூறியுள்ளார். ஆனால், மறு விசாணையில், நான் சுதாகரன் திருமணத்திற்கு கார்கள் வழங்கவில்லை. என்றார்.
சாட்சி ஜலபதிராவ் (திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வாடகைக்கு விடக்கூடியவர்): நான் சுதாகரன் திருமணத்திற்காகத்தான் பொருட்கள் வாடகைக்கு விட்டேன் என்றார். இவரும் முதல் விசாரணையில் தற்போது கூறிய பதிலும், இரண்டாம் கட்ட விசாரணையில் கட்சிக் கூட்டத்திற்காக வழங்கியதாக கொடுத்தாக மாற்றி கூறியவர். தற்போது முதலில் கூறியது சரி என்று கூறியுள்ளார்.
Wednesday, December 15, 2010
Tuesday, December 14, 2010
ஸ்பெக்ட்ரம் ஊழல் சி பி ஐ அதிரடி கனிமொழி தோழர் ஜெகத் கஸ்பர் , நக்கீரன் காமராஜ் வீட்டிலும் சோதனை
டெல்லி மும்பை சென்னை ஊட்டி பெரம்பலூர், திருவாணைய்க்கால் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடக்கிறது. இதில் 100 சிபி ஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 34 இடங்களில் சோதனை நடைபெறுகிறது
நக்கீரன் பத்திரிகை இணையாசிரியர் காமராஜ் , கனிமொழியின் தோழர் பாதிரியார் ஜெகத் கஸ்பர் மற்றும் ராசாவின் ஆடிட்டர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
நீராடியா அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.