Saturday, December 18, 2010

வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

காங்கிரஸ் திமுகவை கழட்டி விடுமா ?
காங்கிரஸ் அதிமுக கூட்டணி உருவாகுமா?
அல்லது தற்போதைய கூட்டணிகளே தொடருமா ?
விஜயகாந்த்யாருடன் கூட்டணி வைப்பார் ?
இந்தக் கேள்விகளுக்கு சுவையான பதில்களை
வாசகர்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்
சிறந்த பதில்கள் நம் தளத்தில் வெளியிடப்படும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி udaiam.news7@gmail.com

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83வது சிறப்பு மாநாடு காங்கிரசின் சிக்கல்களை எதிர்கொள்ள வியூகம் அமைக்கப்படும்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83வது சிறப்பு மாநாடு
காங்கிரசின் சிக்கல்களை எதிர்கொள்ள வியூகம் அமைக்கப்படும்

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பொதுச்செயலாளர் ராகுல்காந்தி உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.


வடமேற்கு டெல்லியில் உள்ள சண்டிகார் சாலையில் புராரி என்ற இடத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. சுமார் 20 கோடி ரூபாய் செலவில் இந்த மாநாடுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உணவு கூடம், மருத்துவமனை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் 400க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாநாடு நடைபெறுகிறது. இது, 83 வது மாநாடு ஆகும். கடந்த 1978 ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் டெல்லியில் மாநாடு நடக்கிறது. ..

மாநாட்டில் 2011 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு புதுச்சேரி கேரளா அஸ்ஸாம் ,மேற்கு வங்காளம் , ஆகிய மாநிலங்களில்தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியின் சாதக பாதகங்களை விவாதிப்பதோடு 2012 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரபிரதேஷம் , குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டிய வியூகம் குறித்தும் திட்டமிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் பிகார் மாநில சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு கிடைத்த படுதோல்வி குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, December 17, 2010

தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை -ஜெயலலிதா

தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை -ஜெயலலிதா

தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என அதிமுக பொது செயலாளர் -ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்

’’2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2001-ஆம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் வரவேற்கிறேன்.


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினை கடைப்பிடித்ததன் காரணமாகத் தான் இது போன்றதொரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.


இந்த ஊழலின் நாயகரான முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை ஏன் விசாரிக்கவில்லை? என்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டபிறகு தான் தன்னுடைய நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத் துறை அண்மைக் காலமாக தீவிரப்படுத்தி இருக்கிறது.


இந்தக் கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி மூன்று வாரங்கள் ஆன நிலையிலும், இது நாள் வரை ராசாவிடம் விசாரணை நடத்தாதது, மத்திய புலனாய்வு அமைப்பு தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக்குகிறது. மத்திய புலனாய்வுத் துறையின் இந்தச் செயல்பாடு தான், இந்த ஊழல் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தீர்ப்பளிக்க தூண்டுகோலாக இருந்து இருக்கிறது.


2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்ததோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிந்துவிடவில்லை என்று தொடர்ந்து நான் கூறி வந்துள்ளேன். இது ஓர் ஆரம்பம் தான் என்றும் கூறியிருந்தேன். இதற்குப் பிறகு தான் இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தன.


ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ராசா மத்திய அமைச்சராக இருந்த போது உச்சத்திற்கு சென்றாலும், முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழலை 2001-ஆம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.


இருப்பினும், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்பதை காரணம் காட்டி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தவிர்க்கக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வரம்பு என்பது நிச்சயமாக சில வரையறைகளுக்கு உட்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பாலானோர் இந்த ஊழலின் பின்னணியிலும், இந்த ஊழலுக்குத் துணையாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்க முடியாது.


இந்த ஊழலில் உள்ள முழு உண்மையும் வெளிவர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பது தான். எனவே, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கூர்ந்து கண்காணிக்கும் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே சமயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்


ஓட்டுக்கு தரும் காசை கோவில் உண்டியலில் போடுங்க பொன்ராதா கிருஷ்ணன்

ஓட்டுக்கு தரும் காசை
கோவில் உண்டியலில் போடுங்க பொன்ராதா கிருஷ்ணன்

தேர்தலின் போது தி.மு.க.,வினர் ஓட்டிற்கு தரும் பணத்தை வாங்கி, அதை கோயில் உண்டியலில் போடுங்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையைப்போல, தமிழக அரசு இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் நேற்று, பா.ஜ.,சார்பில் "தாமரை ரதயாத்திரை' நிகழ்ச்சி நடந்தது. இதை துவக்கி வைத்து, அக்கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளாக லட்சக்கணக்கான இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தராமல் இருக்கும் மத்திய, தமிழக அரசுகளை கண்டிக்கிறோம். அதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித்தொகை தரக்கூடாது என நாங்கள் கூறவில்லை. அவர்களைப்போல, இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். அது கிடைக்கும்வரை நாங்கள் ஓயப்போவது கிடையாது.


ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தகவல்தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்களது வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.இது நாடகம்தான். அமைச்சர் பதவியில் இருந்தபோதே, ராஜாவை டிஸ்மிஸ் செய்து தி.மு.க., முக்கிய தலைவர்களின் வீட்டில் சி.பி.ஐ., சோதனை செய்திருந்தால் மத்திய மற்றும் தமிழக அரசுகள் பதவியில் இருந்திருக்காது. ஒரே ஆண்டில் எட்டு முறை பெட்ரோல் விலையை உயர்த்தியது ஒன்றே மத்திய காங்., கூட்டணி அரசின் சாதனை.


தமிழகம் உருப்பட வேண்டுமெனில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவுகட்டப்படவேண்டும். தேர்தலில் ஓட்டுக்காக தி.மு.க.,வினர் தரும் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில், அது கொள்ளையடிக்கப்பட்ட பொதுமக்களின் பணம். ஆனால், அப்பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிடுங்கள். 60 தலித் சமுதாய குடும்ப நிலங்களை அபகரித்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது புகார் எழுந்துள்ளது, என்றார். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் முரளிதரராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரதயாத்திரை புதியம்புத்தூர், புதுக்கோட்டை, திருச்செந்தூர் வழியாக உடன்குடியை அடைந்தது. இரவு, அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு- வழக்குமூன்று சாட்சியங்கள் -முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம்

ஜெயலலிதா சொத்து குவிப்பு- வழக்குமூன்று சாட்சியங்கள் -முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம்
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணையில், மூன்று சாட்சியங்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக, முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும், விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்து. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி, தினகரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் 41 சாட்சியங்கள், குறுக்கு விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக தகவல் கொடுத்ததால், அவர்களிடம் மறு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் 41 சாட்சியங்களிடம் மறு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முதல், சாட்சிகளின் மறுவிசாரணை துவங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரு சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும், ஜெயலலிதா தரப்புக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் வாக்குமூலம் கொடுத்தனர்.

நேற்று மூன்று சாட்சியங்கள் மட்டுமே ஆஜராகிருந்தனர். அவர்களிடம் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா விசாரணை செய்தார். சாட்சி ஜோசப் (தனியார் கம்பெனி உரிமையாளர்): என்னுடைய கம்பெனியை விலைக்கு விற்பதற்காக, சுதாகரனிடமிருந்து 20, 20, 10 லட்ச ரூபாய் என மூன்று "செக்'காக 50 லட்சம் ரூபாய் வாங்கினேன். இவர் முதல் விசாரணையில், தற்போது கூறியதை கூறியிருந்தார். ஆனால், இரண்டாம் கட்ட விசாரணையில் சுதாகரனிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கியதாக பல்டியடித்தார். தற்போது முதலில் கூறியதுதான் உண்மை என்றார்.

சாட்சி வின்சன்ட் (டிராவல்ஸ் கம்பெனி உரிமையாளர்): சுதாகரன் திருமணத்திற்கு எனது டிராவல்சில் இருந்து 10 கார்கள் வாடகைக்கு அனுப்பியது உண்மை தான். இவர் முதல் விசாரணையில் இவ்வாறே கூறியுள்ளார். ஆனால், மறு விசாணையில், நான் சுதாகரன் திருமணத்திற்கு கார்கள் வழங்கவில்லை. என்றார்.

சாட்சி ஜலபதிராவ் (திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வாடகைக்கு விடக்கூடியவர்): நான் சுதாகரன் திருமணத்திற்காகத்தான் பொருட்கள் வாடகைக்கு விட்டேன் என்றார். இவரும் முதல் விசாரணையில் தற்போது கூறிய பதிலும், இரண்டாம் கட்ட விசாரணையில் கட்சிக் கூட்டத்திற்காக வழங்கியதாக கொடுத்தாக மாற்றி கூறியவர். தற்போது முதலில் கூறியது சரி என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ""மேலும் சாட்சிகளின் விசாரணை ஜனவரி 3, 4, 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கும்,'' என்று உத்தரவிட்டார்

Tuesday, December 14, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் சி பி ஐ அதிரடி கனிமொழி தோழர் ஜெகத் கஸ்பர் , நக்கீரன் காமராஜ் வீட்டிலும் சோதனை

ஸ்பெக்ட்ரம் ஊழல் சி பி ஐ அதிரடி கனிமொழி தோழர் ஜெகத் கஸ்பர் , நக்கீரன் காமராஜ் வீட்டிலும் சோதனை

டெல்லி மும்பை சென்னை ஊட்டி பெரம்பலூர், திருவாணைய்க்கால் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடக்கிறது. இதில் 100 சிபி ஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 34 இடங்களில் சோதனை நடைபெறுகிறது
நக்கீரன் பத்திரிகை இணையாசிரியர் காமராஜ் , கனிமொழியின் தோழர் பாதிரியார் ஜெகத் கஸ்பர் மற்றும் ராசாவின் ஆடிட்டர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

நீராடியா அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, December 12, 2010

கருணாநிதி கோவை பயணம் ரத்து ஏன்? ராசா கைது செய்யப்படுகிறார் ? மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ் ? பரபரப்பு தகவல்கள்

கருணாநிதி கோவை பயணம் ரத்து ஏன்? ராசா கைது செய்யப்படுகிறார் ? மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ் ? பரபரப்பு தகவல்கள்

தமிழக முதல்வர் கருணாநிதியின் கோவை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . முதல்வரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு அவரது உடல்நிலை தான் காரணம் என தெரிவிக்கப்பட்டாலும் டெல்லி அரசியல் அரங்கில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படப்போகும் முன்னோட்டமாகவே முதல்வரின் கோவை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னாள் அமைச்சர் ராசாவின் தொலை தொடர்பு துறையில் சிபி ஐ தொடர்ந்து அதிரடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் அடுத்த நகர்வாக ஆ ராசாவின் கைது நடவடிக்கை உடனடியாக இருக்க கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இரவு ராசா மீதான கைது நடவடிக்கை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது
அதற்கு திமுகவின் ரியாக்ஸன் என்னவாக இருக்கும் எனயூகங்கள் பரவத்தொடங்கியுள்ளன. மத்திய அரசுக்கு கொடுத்துள்ள ஆதரவை திமுக வாபஸ் பெறுமா ? உடனடியாக மத்திய அரசு கவிழும்சூழல் ஏற்படுமா ? ஜெயலலிதா ஆதரவை காங்கிரஸ் கேட்டுப்பெறுமா ? என்பது போன்ற கேள்விகள் ஊடகவியலாளர்கள் மற்றும் உளவுத்துறை அதிகார்களால் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது தமிழக அரசியல அதிர்வால் அகில இந்தியாவும் அரசியல் அதிரடியால் பற்றிகொள்ளப்போகிறது.

அதிமுகவில் நடிகர் விஜய்

அதிமுகவில் நடிகர் விஜய்

தமிழக் திரைப்பட உலகில் முன்னணி நடிகரான விஜய் விரைவில் அதிமுகவில் இணையக்கூடும் என்ற செய்திகள் அதிமுக வட்டாரத்தில் இருந்தும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தும் வெளி வரத்தொடங்கியுளது.
சமீபகாலமாக நடிகர் விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின . சொல்லிவைத்தாற்போல் பெரிய இடத்து தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை தழுவின. இது குறித்து மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தின் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அவர் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்றேன் என்று மட்டும்தான் சொன்னார். அதற்கே அந்த நடிகரின் 4, 5 படங்களை தோல்வி படங்களாக ஆக்கி விட்டனர். இதைப் பற்றி அந்த நடிகர் என்னிடம் முறையிட்டார் என்றார்.

அந்த நடிகர் என்பது விஜய்தான் என்று ஊடகங்கள் வெளிப்படுத்தின. இதுகுறித்து விஜய் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசியது இதுதான் முதல்முறை. அந்த நேரத்தில் சில விஷயங்களை பரிமாறிக்கொண்டோம் என்றார். இதையடுத்து விஜய் அதிமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.

தற்போது விஜய்யின் காவலன் படம் வரும் 17ஆம் தேதி வெளியாக தயாராக இருக்கிறது. இந்நிலையில் விஜய் நடித்த குருவி, அழகிய தமிழ்மகன், வேட்டைக்காரன், வில்லு உள்ளிட்ட படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டன. எனவே நஷ்டத்திலும் விஜய் பங்கெடுத்துக்கொள்வதாக உறுதியளித்தால்தான் காவலன் படத்தை வெளியிட சம்மதிப்போம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் காவலன் படத்தின் விளம்பரங்களில் சென்னையில் புக்கிங் செய்யப்பட்ட தியேட்டர்களின் பட்டியலை மட்டுமே வெளியிட்டிருகிறார்கள். வெளியூர் தியேட்டர்களின் பெயர்கள் எதுவுமே இல்லை.

தன் காவலன் படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக விஜய் நினைக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ஜெமினி பிக்சர்ஸின் த்ரீ இடியட்ஸ் படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டிய விஜய், இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.

சன்பிக்ஸர்ஸுக்கு நெருக்கமான ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க, சன் பிக்ஸர்தான் காரணம் என்று நினைக்கிறார் விஜய். முடி ஒட்ட வெட்டப்பட்டுவிட்டதால் தற்போது எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதால், விஜய் பாரினுக்கு கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில் கடந்த 9ஆம் தேதி எஸ்.ஏ. சந்திரசேகர் போயஸ்கார்டனுக்கு சென்று, ஜெயலலிதாவை சந்தித்து விஜய்க்கு தொழில் ரீதியாக கொடுக்கும் தொல்லை குறித்து முறையிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் மீடியாக்கள் போயஸ் கார்டனை முற்றுகையிட்டதால் ஜெயலலிதாவுடனான சந்திப்பை எஸ்.ஏ.சந்திரசேகர் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை ஜெயலலிதா வீட்டுக்கு, எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்றார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

விஜய்க்கு தொழில் ரீதியாக வரும் பிரச்சனை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விவரமாக எடுத்துரைத்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்த ஜெயலலிதா அனைத்து வகையிலும் உதவியாக இருப்பதாக உறுதி அளித்தாராம்.

நடிகர் விஜய்யை அதிமுகவில் கொண்டு வந்துசேர்க்கும் வேலையை நடிகர் ராதாரவி தொடர்ந்து செய்து வரு வதாக செய்திகள் வெளிவந்த நிலையில் போயஸ் கார்டனில் விஜய் தந்தை ஜெயலலிதாவை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது

விஜய் அதிமுகவில் சேர்வார் என்றும் அதிமுகவில் சேராவிட்டால் கூட வரப்போகும் சட்ட சபை தேர்தலில் முழு மூச்சாக அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரக்களத்தில்
இறங்குவார் என அடித்துக்கூறுகிறது அதிமுக வட்டாரம் a

Saturday, December 11, 2010

காங்கிரசைக்கண்டு கருணாநிதி நடுங்குகிறார். ஜெயலலிதா

காங்கிரசைக்கண்டு கருணாநிதி நடுங்குகிறார். ஜெயலலிதா

தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலக மூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்.

இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும் போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? என்று பேசி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் மேற்படி பேச்சு 6.12.2010 முரசொலியில் வெளியாகி இருக்கிறது. இதே போன்று, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு, ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும் தான் பூதாகரமாக இந்தப்பிரச்சினையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒரு சிலர் பங்கிட்டுக்கொண்டதைப் போலவும், அதற்காக பாராளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கருணாநிதியின் மேற்படி கேள்வி பதில் 7.12.2010 அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது.

ஆனால், நேற்றைய அறிக்கையில், இளைஞன் திரைப்பட விழாவில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா? என்று தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடியப்பார்ப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.


நேற்றைய அறிக்கையில் ஓர் உண்மையை கருணாநிதி மறைத்துவிட்டார். அதாவது, நேற்றைய அறிக்கையில், இளைஞன் திரைப்பட விழாவில் தான் சொன்ன ஒருவர் என்ற வார்த்தையை தனக்கு வசதியாக எடுத்து விட்டார்.

மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்பது அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Friday, December 10, 2010

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து போட்டி சீமான் பரபரப்பு பேட்டி

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து போட்டி சீமான் பரபரப்பு பேட்டி
தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர்.


இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. இந்த முறை 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதனால் எனது தொழில் முடங்கியது. இதற்கெல்லாம் தமிழக அரசுதான் காரணம். அதனால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்க உள்ளோம் என்றார்.


பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்தார்.




கேள்வி: தமிழக அரசு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்ததாக கூறுகிறீர்களே, அதுகுறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: தமிழக அரசு மீது வழக்கு போட முடிவு செய்துள்ளோம்.


கேள்வி: வரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?


பதில்: நாங்கள் தேர்தலில் போட்டியிட போகிறோம்.


கேள்வி: நீங்கள் போட்டியிடுவீர்களா?


பதில்: நான் போட்டியிடவில்லை.


கேள்வி: ஆளுங்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வீர்களா?


பதில்: நாம் தமிழர் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியான எதிரி. அவர்களோடு கூட்டணி யார் வைத்தாலும் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.

கேள்வி: முதல்வர் கருணாநிதியை எதிர்த்து நீங்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக நாம் தமிழர் இயக்கத்தினரால் சொல்லப்படுவது உண்மையா?


பதில்: நடக்கலாம்.


இவ்வாறு சீமான் பதில் அளித்தா

அலகாபாத் உயர் நீதிமன்றம் குறித்து அதிரடி கருத்து வாபஸ் பெற உச்சநீதிமன்றம் மறுத்தது

அலகாபாத் உயர் நீதிமன்றம் குறித்து அதிரடி கருத்து வாபஸ் பெற உச்சநீதிமன்றம் மறுத்தது
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சில நடவடிக்கைகள் அழுகிப்போயுள்ளன", "மனம் போன போக்கில் செயல்படுகிறார்கள்" ஆகிய கருத்துகளை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.பரபரப்பை ஏற்படுத்திய இந்த கருத்தை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த கருத்தை திரும்பப் பெற நீதிபதிகள் மார்க்கண்டே கட்ஜூ, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றக் குழு மறுத்துவிட்டது. எனினும், "திறமையான மற்றும் நேர்மையான நீதிபதிகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ளனர்." என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

seemaanrelease/urge/suit against/karunaagovt

கருணாநிதி அரசு மீது வழக்கு தொடருவோம் சீமான் தரப்பு அதிரடி அறிவிப்பு

நாம் தமிழர் இயக்கத்தலைவரும் திரைப்பட இயக்குனருமான சீமான் இன்று விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசின் அராஜக கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தும் ஐந்து மாதங்களுக்கு மேலாக சீமானை சிறையில் அடைத்து வைத்ததற்காக தமிழக அரசின் மீது வழக்கு தொடருவோம் என சீமான் தரப்பு ஆவேசமாக தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீமான் விடுதலைக்கான நீதிமன்ற உத்தரவை, வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் இன்று மதியம் 1 மணி அளவில் ஒப்படைத்தார். இதையடுத்து சிறையின் உள்ளே விடுதலை செய்வதற்கான நிர்வாக பணிகள், நடந்து வருகின்றன.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர்,

அராஜக கொடுங்கோல் அரசை


எதிர்த்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது. விடுதலைக்கான உத்தரவு நீதிமன்றம் தந்தும், சீமானை விடுதலை செய்ய அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டது.

பல முட்டுக்கட்டைகளை கடந்து, விடுதலைக்கான ஆணைகளை பெற்று வந்து நாங்கள் சிறையில் தந்துள்ளோம். அதிகாரிகளையும் தரவைத்தோம். சீமானை 5 மாதம் சிறையில் வைத்தததற்காக தமிழக அரசு மீது வழக்கு தொடர உள்ளோம்என அவர் தெரிவித்தார்

Thursday, December 9, 2010

மேலவை வாக்காளர் பட்டியல்பெயர் சேர்ப்பு டிசம்பர் 17 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்புtn-leg-council-voterlist-xten

மேலவை வாக்காளர் பட்டியல்பெயர் சேர்ப்பு டிசம்பர் 17 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

மேலவை வாக்காளர் பட்டியல்பெயர் சேர்ப்பு டிசம்பர் 17 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழக சட்டமேலவைக்கான பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 17ம் தேதி வரை வழங்கலாம்' .வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் முதியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் டிசம்பர் ஏழாம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த கால அவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் நீடித்துள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் சட்டமேலவைகளில் சட்டமேலவைக்கான வாக்காளர் பட்டியலில் பட்டதாரிகள், ஆசிரியர்கள் முறையே படிவம் 18, 19ல் பூர்த்தி செய்து டிசம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் விடுதலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுசீமான்/realease

இந்திய மீனவனை இலங்கை ராணுவம் தாக்கினால் சிங்கள மாணவனை தாக்குவோம் என்பது போன்ற உணர்ச்சிகர பேச்சினை பேசிய திரைப்படஇயக்குனர் சீமானை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த உத்தரவை ரத்து செய்து சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சீமான் இன்று மாலை விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் இன்று மாலை அல்லது நாளை விடுதலை செய்யப்படுகிறார்.

Wednesday, December 8, 2010

பாப்ரி பள்ளிவாசல் போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டதாக அறிவிப்பு

பாப்ரி பள்ளிவாசல் போராட்டம் - பி ஜே அமைப்பு ஜனவரி 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டதாக அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.என அந்த அமைப்பு தனது அதிகார பூர்வ வலை தளத்தில் tntj .net இல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Tuesday, December 7, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சி பி ஐ அதிரடி ரெய்டு மாமியார் வீட்டிலும் சோதனை

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சி பி ஐ அதிரடி ரெய்டு மாமியார் வீட்டிலும் சோதனை

உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சிபி ஐ ரெய்டு இன்று காலை ரெய்டு செய்தது . ரெய்டு தொடர்வதாக தலைநகர் டெல்லி , சென்னை மற்றும் பெரம்பலூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன தொலைத்தொடர்பு தரையின் முன்னாள் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா வீட்டிலும் பெரம்பலூரில் உள்ள ராசாவின் பூர்வீக வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. . மற்றும் ராசாவின் அமைச்சரகத்தில் அதிகாரிகளாக ராசாவின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டதாக கூறப்படும் சொந்தாலியா , ஸ்ரீதர்.மற்றும் சித்தார்த் வீடுகளில்ம் ரெய்டு நடைபெறுவதாக தலைநகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராசாவின் மாமியார் மற்றும் சகோதரர் வீட்டிலும் சி பி ஐ தனது அதிரடி சோதனையை தொடகியுள்ளது. இந்தியாவின் பிரம்மாண்ட ஊழல் தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல்கள் மழையால் குளிர்விட்டு கிடந்த தமிழக அரசியலை சூதேற்றியுள்ளது.

குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்மஸ் விழா ஜெயலலிதா கலந்து கொள்கிறார்

குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்மஸ் விழா ஜெயலலிதா கலந்து கொள்கிறார்

அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு வரும் 23ம் தேதி நடக்கும் 13வது கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கின்றார்.


கிறிஸ்துமஸ் விழா வரும் 23ம் தேதி அருமனை நெடுங்குளம் ஜங்ஷனில் உள்ள சார்லஸ் மைதானத்தில் நடக்கிறது. விழாவிற்கு இயக்கத் தலைவர் தேவராஜ் தலைமை வகிக்கிறார். அருள், ஜாண்செல்வராஜ், சிங், அகஸ்டின் டேவி, டார்வின், எட்வின், காட்வின் ஜேசன் முன்னிலை வகிக்கின்றனர். சட்ட ஆலோசகர் வக்கீல் ஜஸ்டின் வரவேற்கிறார். விழாவை முன்னாள் சி.எஸ்.ஐ., பேராயர் கேசரி ஜெபம் செய்து துவக்கி வைக்கிறார். மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் அகில உலக தலைவர் பேராயர் மோரான் மோர் பசலியோஸ் கிளிமிஸ் கதோலிக்கோஸ் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் பேசுகிறார்.


விழாவில் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விருந்தினர்களுக்கு இயக்கத்தலைவர் ஸ்டீபன் நினைவு பரிசு வழங்குகிறார். ஆயர் வின்சென்ட் சாமுவேல், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றகழக மாநில துணைசெயலாளர் காதர் மைதீன்,தூத்தூர் உயர் மறைவட்ட ஆயர் பதிலாள் ஜாண் டி.போஸ்கோ, குமரி மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ பேரவை தலைவர் ஞானதாஸ், சுரேஷ் சாமியார்காணி, பாஸ்டர்கள் வினிஷ் சதீஷ், தாசையா, தேவசுந்தரம், மரியதாஸ், சைமன், ரூபன், எம்.எல்.ஏ., லீமாறோஸ், முன்னாள் எம்.எல்.ஏ., அப்புநடேசன், பாக்கியபுரம் பங்குத்தந்தை காட்வின், டோமி, ஏசுதாஸ், வக்கீல் சாலின், ஜார்ஜ் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். எபனேசர் நன்றி கூறுகிறார். முன்னதாக வி.டி.எம்., காலேஜ் மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ஜெயலலிதாவிற்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழாவில் ஏழை எளியோருக்கு நலஉதவி வழங்கப்படுகிறது.


இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்கச் செயலாளர் ஸ்டீபன் பேசியதாவது: வழக்கம் போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதால் விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும். விழாவில் பேராயர்கள், ஆயர்கள், அருட்தந்தையர்கள், பாஸ்டர்கள், கிறிஸ்தவ பெரியோர்கள் கலந்து கொள்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு, தமிழ்நாடு மற்றும் கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் ஊர்வலங்கள், ஆண்கள், பெண்களின் சிங்காரிமேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழாவில் ஏழைகளுக்கு நலஉதவி வழங்கப்படும். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பதால் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். விழாவை காணவரும் அனைவருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் செய்து தரப்படும். இவ்வாறு ஸ்டீபன் கூறினா
பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் இந்த பகுதியில் கிறிஸ்மஸ் விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வது குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தை பரபர்பாக்கியுள்ளது.

Monday, December 6, 2010

கருணாநிதியை, மீண்டும் ஆறாவது முறையாக முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஸ்டாலின்

கருணாநிதியை, மீண்டும் ஆறாவது முறையாக முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஸ்டாலின்

மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் கருணாநிதியை, மீண்டும் முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் சித்தலூர் ஊராட்சியில், 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: சமத்துவபுரம் திட்டம் இந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் இல்லை. கடந்த 1996ம் ஆண்டே கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்ற போது துவக்கி வைக்கப்பட்டு, 148 இடங்களில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின், 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் பொறுப்பேற்ற ஜெ., சமத்துவபுரம் திட்டத்தை கிடப்பில் போட்டார்.மீண்டும் ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வரான போது, சமத்துவபுரம் உருவாக்கப்படும் என்று கூறினார். பெரியாரின் 92வது வயதை குறிக்கும் வகையில் இனி உருவாக்கப்படவுள்ள 92 சமத்துவபுரம் இடங்களிலும் பெரியார் சிலை வைக்கப்படும் என்றும் கூறினார். சமத்துவபுரத்தின் நோக்கம் ஜாதி, மதம் பேதமின்றி ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடன் வாழ வேண்டும் என்பதாகும்.


இதேபோல், தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச "டிவி', சமத்துவபுரம், உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.தமிழகத்தில் குடிசை வீடுகளே இருக்கக்கூடாது என்று எண்ணிய கருணாநிதி, கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதற்கு தமிழகத்தில் 21 லட்சம் குடிசை வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது கான்கிரீட் வீடுகளாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டத்தை உருவாக்கி வரும் கருணாநிதியை, மீண்டும் ஆறாவது முறையாக முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் எப்போதும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினா

த்ரிஷா , கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்

த்ரிஷா , கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்
மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.


இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. படத்திற்காக, நடிப்புக்காக, சும்மா கதைக்காக, பாடலின் வீரியத்திற்காக யாரும் விளக்கம் கோரலாம். யாரும் எந்த மதஉணர்வையும், சிறுமைபடுத்தியும், இந்திய மக்கள் சட்டங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோ

Sunday, December 5, 2010

உதயம் செய்திவலைப்பூ உங்களை வரவேற்பதில் அக மகிழ்கிறது தமிழ் செய்தி உலகில் நடுநிலையுடன் மின்னல் வேகத்தில் செய்திகளை வழங்கி தமிழ் கூறும் நல்லுலகில் சிந்தனைக்கு விருந்தளிப்பதே நமது நோக்கம் . உறவுகள் அனைவரும் இந்த நன்னோக்கத்திற்கு பக்கபலமாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்

ஆசிரியர் உதயம் செய்தி நிறுவனம்