நாம் தமிழர் இயக்கத்தலைவரும் திரைப்பட இயக்குனருமான சீமான் இன்று விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசின் அராஜக கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தும் ஐந்து மாதங்களுக்கு மேலாக சீமானை சிறையில் அடைத்து வைத்ததற்காக தமிழக அரசின் மீது வழக்கு தொடருவோம் என சீமான் தரப்பு ஆவேசமாக தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீமான் விடுதலைக்கான நீதிமன்ற உத்தரவை, வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் இன்று மதியம் 1 மணி அளவில் ஒப்படைத்தார். இதையடுத்து சிறையின் உள்ளே விடுதலை செய்வதற்கான நிர்வாக பணிகள், நடந்து வருகின்றன.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர்,
அராஜக கொடுங்கோல் அரசை
எதிர்த்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது. விடுதலைக்கான உத்தரவு நீதிமன்றம் தந்தும், சீமானை விடுதலை செய்ய அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டது.
பல முட்டுக்கட்டைகளை கடந்து, விடுதலைக்கான ஆணைகளை பெற்று வந்து நாங்கள் சிறையில் தந்துள்ளோம். அதிகாரிகளையும் தரவைத்தோம். சீமானை 5 மாதம் சிறையில் வைத்தததற்காக தமிழக அரசு மீது வழக்கு தொடர உள்ளோம்என அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment