அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு வரும் 23ம் தேதி நடக்கும் 13வது கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கின்றார்.
கிறிஸ்துமஸ் விழா வரும் 23ம் தேதி அருமனை நெடுங்குளம் ஜங்ஷனில் உள்ள சார்லஸ் மைதானத்தில் நடக்கிறது. விழாவிற்கு இயக்கத் தலைவர் தேவராஜ் தலைமை வகிக்கிறார். அருள், ஜாண்செல்வராஜ், சிங், அகஸ்டின் டேவி, டார்வின், எட்வின், காட்வின் ஜேசன் முன்னிலை வகிக்கின்றனர். சட்ட ஆலோசகர் வக்கீல் ஜஸ்டின் வரவேற்கிறார். விழாவை முன்னாள் சி.எஸ்.ஐ., பேராயர் கேசரி ஜெபம் செய்து துவக்கி வைக்கிறார். மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் அகில உலக தலைவர் பேராயர் மோரான் மோர் பசலியோஸ் கிளிமிஸ் கதோலிக்கோஸ் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் பேசுகிறார்.
விழாவில் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விருந்தினர்களுக்கு இயக்கத்தலைவர் ஸ்டீபன் நினைவு பரிசு வழங்குகிறார். ஆயர் வின்சென்ட் சாமுவேல், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றகழக மாநில துணைசெயலாளர் காதர் மைதீன்,தூத்தூர் உயர் மறைவட்ட ஆயர் பதிலாள் ஜாண் டி.போஸ்கோ, குமரி மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ பேரவை தலைவர் ஞானதாஸ், சுரேஷ் சாமியார்காணி, பாஸ்டர்கள் வினிஷ் சதீஷ், தாசையா, தேவசுந்தரம், மரியதாஸ், சைமன், ரூபன், எம்.எல்.ஏ., லீமாறோஸ், முன்னாள் எம்.எல்.ஏ., அப்புநடேசன், பாக்கியபுரம் பங்குத்தந்தை காட்வின், டோமி, ஏசுதாஸ், வக்கீல் சாலின், ஜார்ஜ் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். எபனேசர் நன்றி கூறுகிறார். முன்னதாக வி.டி.எம்., காலேஜ் மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ஜெயலலிதாவிற்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழாவில் ஏழை எளியோருக்கு நலஉதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்கச் செயலாளர் ஸ்டீபன் பேசியதாவது: வழக்கம் போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதால் விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும். விழாவில் பேராயர்கள், ஆயர்கள், அருட்தந்தையர்கள், பாஸ்டர்கள், கிறிஸ்தவ பெரியோர்கள் கலந்து கொள்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு, தமிழ்நாடு மற்றும் கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் ஊர்வலங்கள், ஆண்கள், பெண்களின் சிங்காரிமேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழாவில் ஏழைகளுக்கு நலஉதவி வழங்கப்படும். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பதால் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். விழாவை காணவரும் அனைவருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் செய்து தரப்படும். இவ்வாறு ஸ்டீபன் கூறினா
பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் இந்த பகுதியில் கிறிஸ்மஸ் விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வது குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தை பரபர்பாக்கியுள்ளது.
No comments:
Post a Comment