Saturday, December 18, 2010

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83வது சிறப்பு மாநாடு காங்கிரசின் சிக்கல்களை எதிர்கொள்ள வியூகம் அமைக்கப்படும்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83வது சிறப்பு மாநாடு
காங்கிரசின் சிக்கல்களை எதிர்கொள்ள வியூகம் அமைக்கப்படும்

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பொதுச்செயலாளர் ராகுல்காந்தி உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.


வடமேற்கு டெல்லியில் உள்ள சண்டிகார் சாலையில் புராரி என்ற இடத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. சுமார் 20 கோடி ரூபாய் செலவில் இந்த மாநாடுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உணவு கூடம், மருத்துவமனை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் 400க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாநாடு நடைபெறுகிறது. இது, 83 வது மாநாடு ஆகும். கடந்த 1978 ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் டெல்லியில் மாநாடு நடக்கிறது. ..

மாநாட்டில் 2011 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு புதுச்சேரி கேரளா அஸ்ஸாம் ,மேற்கு வங்காளம் , ஆகிய மாநிலங்களில்தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியின் சாதக பாதகங்களை விவாதிப்பதோடு 2012 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரபிரதேஷம் , குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டிய வியூகம் குறித்தும் திட்டமிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் பிகார் மாநில சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு கிடைத்த படுதோல்வி குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. இவங்க எப்பவும் இப்படிதான் பாஸ்

    நம்பள வச்சி காமெடி பண்றதே வேலையா போச்சி

    இங்கயும் கொஞ்சம் இருக்கு

    http://singhisnotking.blogspot.com/2011/01/1.html

    ReplyDelete